திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே புதிதாக கூடுதல் கட்டிடங்கள் மற்றும் குறைதீர்ப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் சிவன் அருள் நேரில் பார்வையிட்டார்.
கலெக்டர் சிவன் அருள்
கலெக்டர் சிவன் அருள்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே புதிதாக கூடுதல் கட்டிடங்கள் மற்றும் ரூ.69 லட்சத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அத்துடன் குறைதீர்ப்பு கட்டிடத்தையொட்டி ரூ.16 லட்சம் செலவில் கழிப்பிடமும் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை கலெக்டர் சிவன்அருள் நேரில் சென்று பார்வையிட்டு சிமெண்டு கலவை, குழாய் பதிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் கலெக்டர் சிவன்அருள் கூறுகையில், “கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்பொழுது பொதுமக்கள் குறைதீர்வு மனுக்களை பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்படுகிறது. அரசு உத்தரவிட்டதும் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும்” என்றார். அப்போது உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் ரவி உள்பட பலர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com