தரமின்றி கட்டப்படுவதாக விவசாயிகள் புகார்: தானிய சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு

தரமின்றி கட்டப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, தானிய சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியை கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டுமான பணியை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்த காட்சி.
கட்டுமான பணியை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்த காட்சி.
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி, பூலாம்பாடியில் நடந்து வருகிறது. விவசாயிகளின் வேளாண் விளை பொருட்கள் விலை குறைவாக இருக்கும் சமயத்தில் இந்த கிடங்கில் பொருட்களை சேமித்து வைத்து மதிப்பு கூடும்போது அதனை விற்று பயன்பெறலாம். 

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பகுதி விவசாயிகள் தானிய சேமிப்பு கிடங்கு தரமில்லாமல் கட்டப்படுவதாக புகார் தெரிவித்து, கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தா, அதிகாரிகளுடன் தானிய சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு விதிகளுக்கு உட்பட்டு சரியான மற்றும் தரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த நேரத்திற்குள் பணியனை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் சரக துணை பதிவாளர் பாண்டித்துரை, சங்க தலைவர் லட்சுமி, மேலாண்மை இயக்குனர் சமரசம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com