சுற்றுலா அமைச்சகம் தொடங்கி உள்ள இணைய தளத்தில் தங்கும் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும்- கலெக்டர் தகவல்

சுற்றுலா அமைச்சகம் தொடங்கி உள்ள இணையதளத்தில் தங்கும் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
இணையதளம்
இணையதளம்
Published on

நாகர்கோவில்:

சுற்றுலா அமைச்சகம் தொடங்கி உள்ள இணையதளத்தில் தங்கும் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதுடெல்லியில் உள்ள இந்திய சுற்றுலா அமைச்சகம் புதிதாக தொடங்கியுள்ள விரிவான தேசிய ஒருங்கிணைந்த தரவு தளம் மூலம் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத சுற்றுலா தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் தங்களின் விடுதி விவரங்களை www.nidhi.nic.in, www.saat-hi.qcin.org ஆகிய வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் SAATHI என்ற இணையதளத்தில் பதிவுசெய்யும் விடுதி உரிமையாளர்களுக்கு கொரோனா கட்டுபடுத்துதலில் அனைத்து வகைகளிலும் தங்கும் விடுதி பராமரிக்கப்படுகிறது என சுற்றுலாஅமைச்சகம் இந்திய அரசு சுய சான்றிதழ் வழங்கவுள்ளது.

இந்த நற்சான்று மூலம் தங்களின் வணிகத்தை வெகுவாக உயர்த்திக்கொள்ள முடியும். மேலும் சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசு வழங்கும் பயிற்சிகளில் தங்களின் விடுதி பணியாளர்களை பங்குபெறச் செய்து பயன்பெறலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் விவரங்களை tokki702@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

எனவே குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் பதிவு செய்துபயன் பெறலாம். மேலும் சுற்றுலா அலுவலர், சுற்றுலாஅலுவலகம், கன்னியாகுமரி என்ற முகவரியிலும் மற்றும் தொலைபேசி எண் 04652-246276 தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com