

கரூர்:
கரூரில் மாற்றுதிறனாளிகளுக்காண அடையாள அட்டை வழங்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்து அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும் கூட்டுறவுத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ-50,000 வீதம் 2,50,000-க்காண காசோலை களை வழங்கினார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் பலதுறைகளை ஒருங்கிணைத்து சிறப்பு முகாமில் மருத்துவச்சான்று வழங்குதல்,மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு செய்தல், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் பதிவு செய்தல், மாத உதவித்தொகை வழங்க பயனாளிகள் தேர்வு செய்தல், உபகரணங்கள் வழங்குவதற்கு மதிப்பீடு செய்தல் இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று, வருமானச்சான்று ,ரேசன்கார்டு தொடர்பான பணிகள்,வங்கிக் கடன் திட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பித்தல் ஆகிய பணிகள் ஒரே இடத்தில் மேற் கொள்வதற்கு திட்டமிடப்பட்டு இச்சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
இம் முகாமில் கலந்து கொள்பவர்கள் பாஸ்போர்ட் அளவுடைய 5 புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும். இம்முகாமானது 29.122017 அன்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திலும், 3.1.2018 அன்று தாந்தோன்றி மலை ஊராட்சி ஒன்றியத்திலும், 5.1.2018 அன்று கடவூர் ஊராட்சி ஒன்றியத்திலும், 10.1.2018 அன்று அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திலும், 12.1.2018 அன்று தோகமலை ஊராட்சி ஒன்றியத்திலும், 19.1.2018 அன்று க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திலும் 24.1.2018 அன்று குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.