ராமநாதபுரத்தில் பெண்ணிடம் நகைபறிக்க முயன்ற வாலிபர் கைது

கோவை ராமநாதபுரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரத்தில் பெண்ணிடம் நகைபறிக்க முயன்ற வாலிபர் கைது
Published on

கோவை:

கோவை ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கீதா (வயது 52).

இவர் நேற்று இரவு அப்பகுதியில் செல்போனில் பேசிய படி நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் கீதா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார்.

சுதாரித்துக் கொண்ட கீதா நகையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு நகைபறிக்க முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் குனியமுத்தூரை சேர்ந்த ரசூல்(19) என்பது தெரிய வந்தது. இருசக்கர வாகன திருட்டு வழக்கு ஒன்றில் கைதான இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணிடம் நகைபறிக்க முயன்று மீண்டும் சிக்கி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com