கோவை ரெயில் நிலையத்தில் பயணி திடீர் மரணம்

கோவை ரெயில் நிலையம் 4-வது பிளாட்பாரத்தில் இன்று காலை பயணி ஒருவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பயணி மரணம்
பயணி மரணம்
Published on

கோவை:

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 55). இருதய நோயால் அவதிப்பட்ட முஸ்தபா புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

சிகிச்சைக்கு பின்னர் ஊருக்கு ரெயிலில் புறப்பட்டார். எர்ணாகுளம் செல்லும் ரெயில் கோவை ரெயில் நிலையத்தில் நின்றது. கோவை ரெயில் நிலையம் 4-வது பிளாட்பாரத்தில் இன்று காலை சிறிது நேரம் ஓய்வு எடுத்த முஸ்தபா திடீரென அங்கேயே இறந்து விட்டார். 

இது குறித்து கோவை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com