6 வயது மகன் 75 கிலோ- 8 வயது மகள் 70 கிலோ உடல் பருமன் சிகிச்சைக்கு உதவ வேண்டும்: கலெக்டரிடம் தாய் மனு

கோவையில் பெற்ற குழந்தைகளின் உடல் பருமன் பிரச்சனையை சரி செய்ய உதவக் கோரி கலெக்டரிடம் தாய் மனு அளித்துள்ளார்.
அதிக உடல் எடையுடன் காணப்படும் இரு குழந்தைகளை படத்தில் காணலாம்.
அதிக உடல் எடையுடன் காணப்படும் இரு குழந்தைகளை படத்தில் காணலாம்.
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ளது பன்னிமடை. இங்குள்ள கஸ்தூரி நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஜீவிதா. இவருக்கு 6 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு குழந்தைகளுடன் ஜீவிதா வந்தார். கலெக்டரிடம் கொடுத்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 6 வயது மகன் 75 கிலோ எடையும், 8 வயது மகள் 70 கிலோவும் உள்ளனர். இதனால் எனது கணவர் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். நாங்கள் எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறோம். எனது தாய் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து எங்களை காப்பாற்றி வருகிறார். உடல் பருமனுக்கு குழந்தைகளை பல இடங்களில் சிகிச்சைக்கு கொண்டு சென்றோம். ஆனால் சரியாகவில்லை. உடல் எடை அதிகமாக உள்ளதால் அவர்களால் பள்ளிக்கு கூட செல்ல முடியவில்லை.

அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றபோது டாக்டர்கள் உடல் எடை குறித்து எந்த விளக்கமும் தரவில்லை. எனவே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com