மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கோவையில் குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை கோவில்மேடு கூலி நெசவு காலனியை சேர்ந்தவர் பெருமாள் ராஜ்(வயது25). பிளம்பர். இவரது மனைவி சரண்யா (23) . இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பெருமாள் ராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து சரண்யா கடந்த 1 மாதத்திற்கு முன் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த பெருமாள் ராஜ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com