கோவையில் பிக்பாக்கெட் வாலிபர்கள் கைது

கோவையில் பிக்பாக்கெட் வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை ஜி. என். மில் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சில் சாய்பாபா கோவிலில் இருந்து துடியலூர் சென்றார். அப்போது ஜி.என்.மில் வந்த போது செந்தில்குமார் அருகே இருந்த ஒரு வாலிபர் அவரது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து தப்பியோட முயற்சி செய்தார்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் சத்தம்போட்டு பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தார். பின்னர் அந்த வாலிபரை துடியலூர் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் அசோக் நகரைச் சேர்ந்த விஜய் (வயது 21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை நல்லம் பாளையதைச் சேர்ந்தவர் முருகன் (35). சம்பவத்தன்று இவர் துடியலூரில் இருந்து டவுன் ஹாலுக்கு பஸ்சில் சென்றார். அப்போது அவர் அருகே இருந்த ஒரு வாலிபர் அவரது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து தப்பியோட முயற்சி செய்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன் சத்தம் போட்டு பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் அசோக் நகரைச் சேர்ந்த கீரன் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com