கோவை சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை

சிறுமி பாலியல் துன்புறுத்தப்பட்ட வழக்கில் கைதானவர் கோவை சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கோவை:

திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 68). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி பாலியல் துன்புறுத்தப்பட்ட வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று காலை அறையில் தான் வைத்திருந்த துண்டால் அங்குள்ள கம்பியில் துரைசாமி தூக்குப்போட்டு தொங்கினார். அதிர்ச்சியடைந்த மற்ற கைதிகள் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறை அதிகாரிகள் துரைசாமியை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு துரைசாமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கோவை மத்திய சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com