கோவை சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்

கோவை சிறையில் விசாரணை கைதி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கோவை:

மதுரை திருமங்கலம் அருகே உள்ள பாண்டியன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர் திருப்பூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். சரவணனை திருப்பூர் வீரபாண்டி போலீசார் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

விசாரணை கைதியான சரவணன் நேற்று முன்தினம் திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com