கோவை சிறையில் கைதி மரணம்

கோவை சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கைதி பரிதாபமாக இறந்தார்.
கோவை சிறையில் கைதி மரணம்
Published on

கோவை:

ஊட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (47). இவர் மனைவியை கொன்ற வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இதனை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தது. அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்த பால்ராஜ் இன்று காலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து சிறைத்துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து பால்ராஜ் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். 

இது குறித்து சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com