கோவையில் பஸ்கட்டண உயர்வை எதிர்த்து 2-வது நாளாக மறியல் செய்த கல்லூரி மாணவர்கள் கைது

கோவையில் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து 2-வது நாளாக மறியல் செய்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் பஸ்கட்டண உயர்வை எதிர்த்து 2-வது நாளாக மறியல் செய்த கல்லூரி மாணவர்கள் கைது
Published on

கோவை:

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் இன்று 3-வது நாளாக பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவையில் இன்று 2-வது நாளாக அரசு கலை கல்லூரி மாணவர்கள் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து கல்லூரி முன்பு கோ‌ஷம் போட்டனர். அப்போது அவர்கள் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், மாணவர்களிடம் சாலை மறியல் செய்தால் கைது செய்வோம் என்றனர்.

அதையும் மீறி மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்.

அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மாணவர்கள் சிலர் நடுரோட்டில் உருண்டு புரண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் மறியல் செய்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து அவர்களை 2 வேன்களில் ஏற்றி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் நின்றிருந்த மாணவர்களை விரட்டினர். போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறும் போது, உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைக்கும் வரை தினமும் எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

மாணவர்களின் மறியல் போராட்டம் காரணமாக அரசு கலை கல்லூரி பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com