திருவெண்ணைநல்லூர் அருகே தென்னைமரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

தேங்காய் பறிப்பதற்காக தென்னைமரத்தில் ஏறிய வாலிபர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
திருவெண்ணைநல்லூர் அருகே தென்னைமரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி
Published on

திருவெண்ணைநல்லூர்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள வடமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 23). இவர் வீட்டுக்கு தேவையான தேங்காய் பறிப்பதற்காக தனது வீட்டின் பின்புறம் உள்ள தென்னைமரத்தில் ஏறினார். அங்கு தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் முருகன் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com