கொச்சி மாநகராட்சி தேர்தல்: ஒரு வாக்கில் தோல்வியை தழுவிய காங்கிரஸ் மேயர் வேட்பாளர்

கேரளாவின் கொச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட வேணுகோபால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
வேணுகோபால்
வேணுகோபால்
Published on

கொச்சியின் வடக்குத்தீவு வார்டில் போட்டியிட்ட வேணுகோபால் பாஜகவிடம் தோல்வியை தழுவியதால், காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேயர் வேட்பாளருக்கு சரியான நபராக கருதப்பட்ட நிலையில், வேணுகோபால் தோல்வியடைந்ததால் வலுவான மற்றொரு வேட்பாளரை தேட வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. இதற்கு வாக்கு இயந்திரமே காரணம். இதை எதிர்த்து கோர்ட்டிற்கு செல்லும் எண்ணம் இல்லை என வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com