

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது, ஒரு நிர்வாகியின் பதவிக் காலம் முடிந்ததும், 2-வது முறையாக தொடர்ச்சியாக பதவி வகிக்கக்கூடாது, குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு தான் மீண்டும் பதவிக்கு வர வேண்டும், ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு ஓட்டு என்பது உள்பட பல்வேறு சீர்திருத்தங்களை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி அளித்த சிபாரிசுகளை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அத்துடன் லோதா கமிட்டியின் சிபாரிசுகளை அமல்படுத்துவதை மேற்பார்வையிட நிர்வாகிகள் குழுவையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. லோதா கமிட்டியின் சிபாரிசுகளை ஏற்க மாநில கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிசிசிஐ நிர்வாக குழு 4-வது முறையாக நிலைமை குறித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தில் (பி.சி.சி.ஐ.) தகுதி இழந்த உறுப்பினர்கள் தங்களது சொந்த நலனுக்காக லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவதை தாமதப்படுத்த முயற்சிக்கின்றனர். மாநில கிரிக்கெட் சங்கங்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.