

சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு, 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் மிகப் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஆளும் கட்சியினரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களை போட்டியின்றி தேர்வு செய்வதாகவும் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
மேலும், இந்த தேர்தலை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி டி.ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் ஆஜராகி, ‘கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, கூட்டுறவு சங்கத் தேர்தலை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்ய கோரும் அனைத்து வழக்குகளையும் வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தர விட்டார். #tamilnews