

தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவசர ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு சென்னைக்கு கிருஷ்ணா நீரும் முழுமையாக கிடைக்கவில்லை. 12 டிஎம்சிக்குப் பதில் வெறும் 2 டிஎம்சி நீர் தான் கிடைத்தது.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் 200 மில்லியன் லிட்டர் நீர் பெறப்படுகிறது. குவாரிகளில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.