உலகத்தரம் வாய்ந்த சாலைகளால் எளிதில் பயணிக்கலாம் - முதல்வர் பழனிசாமி

பாண்டி பஜாரில் சீரமைக்கப்பட்ட நடைபாதைகள், சாலைகளை திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி, உலகத்தரம் வாய்ந்த சாலைகளால் எளிதில் பயணிக்கலாம் என தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி
Published on

சென்னை:

பனகல் பூங்கா- பாண்டி பஜார் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் மற்றும் சீர்மிகு சாலைகளை இன்று மாலை நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அப்போது பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள சீர்மிகு சாலைகளில் பேட்டரி காரில் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதன்பின்னர், முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தமிழகம் 8-வது இடத்தில் உள்ளது.

உலகத்தரம் வாய்ந்த சாலைகளும், நடைபாதைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் எளிதாக பாண்டி பஜார் பகுதியில் பயணம் செய்ய முடியும். போதிய நிதி ஆதாரத்தை திரட்டி அனைத்து சாலைகளும் படிப்படியாக சீரமைக்கப்படும் என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com