வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட உள்ளது என சுதந்திர தின் உரையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோட்டையில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி
கோட்டையில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி
Published on

சென்னை:

சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின்னர் 9 மணியளவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்கள் உதயமாகிறது. நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், கே.வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.15,000 லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும். சுதந்திரப் போராட்ட ஓய்வூதியதாரர்களின் வாரிகளுக்கான உதவித்தொகை ரூ.7500 லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com