சேலம் வாழப்பாடியில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சேலம் அருகே வாழப்பாடியில் 8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி
கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. சுமார் 13 ஏக்கர் பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கிரிக்கெட் மைதானத்தை இன்று காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com