அமராவதியில் பிரமாண்ட கட்டிடங்கள் - சந்திரபாபு நாயுடு அலுவலகம் 46-வது மாடியில் அமைப்பு

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட அரசு கட்டிடத்தின் 46-வது மாடியில் அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அலுவலகம் அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #Amaravati
அமராவதியில் பிரமாண்ட கட்டிடங்கள் - சந்திரபாபு நாயுடு அலுவலகம் 46-வது மாடியில் அமைப்பு
Published on

நகரி:

ஆந்திர மாநிலத்தின் தலைநகர், அமராவதியில் பிரமாண்டமாக அரசு கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பல ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படும் தலைநகரில் தலைமை செயலகம், அரசு உயர் அலுவலகங்கள், ஐகோர்ட்டு போன்றவை அமைக்கப்படுகின்றன.

இந்த கட்டிடங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் கட்டுகிறது. இதற்கான கட்டிட வடிவமைப்பை ஆந்திர அரசிடம் அளித்துள்ளது. இதில் 5 மெகா பிரமாண்ட அடுக்குமாடி கொண்ட கட்டிடங்கள் கட்டப்படுகிறது.

ஒரு கட்டிடம் 46 மாடிகளை கொண்டது. இதில் 46-வது மாடியில் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அலுவலகம் அமைக்கப்படுகிறது.

மற்ற 4 அடுக்குமாடி கட்டிடங்கள் 40 மாடி கொண்டதாகும். இந்த 5 அடுக்குமாடி கட்டிடங்களில் ஐகோர்ட்டு, சட்டசபை, அரசு அலுவலகங்கள், தலைமை முதன்மை செயலாளர் அலுவலகம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பு போன்றவை அமைக்கப்படுகிறது. சட்டசபை கட்டிடம் 8 லட்சம் சதுர அடியிலும், ஐகோர்ட்டு 2 லட்சம் சதுர அடியிலும் உருவாக்கப்படுகிறது.

மேலும் 5 பிரமாண்ட அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் செல்ல ஒவ்வொன்றையும் இணைக்கும் வகையில் பாலமும் அமைக்கப்படுகிறது.

இந்த பிரமாண்ட அடுக்குமாடி கட்டிட மாதிரிகளை சபாநாயகர் சிவபிரசாத்ராவ், மந்திரி நாராயணா ஆகியோர் பார்வையிட்டனர். #Amaravati #AndhraCM #ChandrababuNaidu

X

Maalai Malar
www.maalaimalar.com