அனுமதியின்றி தனியாக எவரெஸ்ட் சிகரம் ஏற முயன்ற வீரருக்கு ரூ.15 லட்சம் அபராதம்

அனுமதியின்றி தனியாக எவரெஸ்ட் சிகரம் ஏற முயன்ற தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வீரருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்து நேபாள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுமதியின்றி தனியாக எவரெஸ்ட் சிகரம் ஏற முயன்ற வீரருக்கு ரூ.15 லட்சம் அபராதம்
Published on

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மலை ஏறும் வீரர் ரியான் சீன் டேவி (43). இவர் நேபாளம் வந்து இருந்தார். பின்னர் இமய மலையின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க விரும்பினார்.

எனவே நேபாள அரசிடம் அனுமதி எதுவும் பெறாமல் தனியாக எவரெஸ்ட் சிகரம் ஏறினார். அவர் முதல் முகாமில் இருந்து 6400 மீட்டர் உயரத்தில் உள்ள 2-வது முகாமுக்கு ஏறிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

வெளிநாட்டினர் இமய மலையில் ஏற நேபாள அரசுக்கு ரூ.7½ லட்சம் பணம் செலுத்த வேண்டும். அதை இவர் செலுத்தவில்லை. மலை ஏற அனுமதியும் பெறவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com