திருச்செந்தூர் அருகே நண்பர் இறந்த துக்கத்தில் துப்புரவு தொழிலாளி தற்கொலை

திருச்செந்தூர் அருகே நண்பர் இறந்த துக்கம் தாங்காமல் துப்புரவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவில்பட்டி:

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டினம் பிரசாந்த் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). துப்புரவு தொழிலாளி.  நேற்று முன்தினம் இரவு இவரது நண்பரான எவால்ட் இறந்தார். அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக கண்ணன் சென்றார்.  இந்நிலையில் நேற்று அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.  உறவினர்கள் காலையில் தேடி பார்த்தனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சக ஊழியரான சுப்பிரமணியன் அப்பகுதியில் சேகரித்த குப்பைகளை வீரபாண்டியபட்டினம்-காயல்பட்டிணம் பகுதியில் உள்ள ஒரு குப்பை கிடங்கில் கொட்ட சென்றார். அப்போது அங்கு கண்ணனின் சைக்கிள் நின்றது. இதைபார்த்த அவர் அந்த பகுதியில் சுற்றி தேடி பார்த்தார். அங்கு கண்ணன் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

பின்னர் அவர் திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com