ஸ்ரீரங்கம் அருகே தூய்மை பணியாளர் தற்கொலை

ஸ்ரீரங்கம் அருகே தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு எஸ்.எம். காலனியை சேர்ந்தவர் குமரன் (வயது 51). திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள். குமரன் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com