திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் வாக்கி டாக்கிகளை திருடிய துப்புரவு பணியாளர் உள்பட 2 பேர் கைது

திருச்சி எஸ்.பி., அலுவலகத்தில் வாக்கி டாக்கிகளை திருடியது தொடர்பாக துப்புரவு பணியாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருச்சி:

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 33 வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் கையடக்க மைக் 11 என மொத்தம் ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள சாதனங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை திருட்டு போனது. இதுகுறித்து தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை அளித்த புகாரின்பேரில் திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எஸ்.பி., அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த திருச்சி ஏர்போர்ட் ஷாவாலஸ் பகுதியை சேர்ந்த சீனிவாசன் திருடியது தெரியவந்தது.

மேலும் அவர் அந்த கருவிகளை சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் (50) என்பவரிடம் விற்பனை செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். எஸ்.பி. அலுவலகத்திலேயே நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com