தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

பென்னாகரம்:

பென்னாகரம் பேரூராட்சியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தற்காலிக தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களை சுகாதார மேற்பார்வையாளர் அவதூறாக பேசுவதாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று சி.ஐ.டி.யு. தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் சுகாதார மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தற்காலிக தூய்மை பணியாளர்கள் பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகாதார மேற்பார்வையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com