மகாராஷ்டிரா: அச்சடிக்கும் முன்பே வாட்ஸ்-அப் குரூப்பில் வெளியான 10-ம் வகுப்பு புத்தகம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய பாடத்திட்டத்தில் தயார் செய்யப்பட்ட புத்தகம் அச்சடிக்கும் முன்பே வாட்ஸ்-அப் குரூப்பில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா: அச்சடிக்கும் முன்பே வாட்ஸ்-அப் குரூப்பில் வெளியான 10-ம் வகுப்பு புத்தகம்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டிற்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாடப்புத்தகங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் புத்தகம் அச்சிடும் முன்பே சமூக ஊடகங்களில் வெளியானது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் முறையாக மகாராஷ்டிரா கல்வித்துறைக்கு பதிலாக பாடப்புத்தகம் ஆணையம் புத்தகத்தை வடிவமைத்தது. அந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் மிகவும் ரகசியமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இருப்பினும் புத்தகம் சட்ட விரோதமாக வெளியிடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த புத்தகங்கள் வாட்ஸ்-அப்பில் வெளியிடப்பட்டாலும் அதை அச்சிடுவதற்கு எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் புத்தகம் ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com