உ.பி.: வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை சக மாணவர்களை வைத்து கன்னத்தில் அறைந்த ஆசிரியை

உத்தரப்பிரதேசத்தில் வீட்டுப்பாடம் செய்யாத மூன்றாம் வகுப்பு மாணவனை சக் மாணவர்களால் 40 தடவைக்கும் மேல் கன்னத்தில் அறைய வைத்த ஆசிரியை வேலையை விட்டு நீக்கப்பட்டார்.
உ.பி.: வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை சக மாணவர்களை வைத்து கன்னத்தில் அறைந்த ஆசிரியை
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம்  கான்பூர் நகரத்தில் தனியார் பள்ளி ஒன்ரு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று காலை வகுப்பு ஆசிரியை மாணவர்கள் வீட்டு பாடங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, 3-ம் வகுப்பு மாணவன் வீட்டுப் பாடம் செய்யாதது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களை அழைத்து அந்த மாணவனின் கன்னத்தில் அறைய செய்தார்.

அதன்பின், அந்த மாணவன் மாலையில் வீடு திரும்பினான். அவனது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பெற்றோர் கேட்டபிரகே, வகுப்பில் தான் கன்னத்தில் அறை வாங்கியதை தெரிவித்தான்.

இதைத்தொடர்ந்து, அந்த மாணவனின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை வேலையை விட்டு நீக்கப்பட்டார்.

வீட்டு பாடம் செய்யாத 3-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்களை வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com