தடியடி சம்பவத்தை கண்டித்து மதுரையில் முஸ்லிம்கள் விடிய விடிய போராட்டம்

சென்னையில் நடைபெற்ற தடியடியை கண்டித்து மதுரையில் முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மதுரை:

சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்தை கண்டித்து மதுரையில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மகபூப் பாளையம் ஜின்னா திடலில் கடந்த 14-ந்தேதி போராட்டம் தொடங்கியது. இன்று 5-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

பெண்கள், குழந்தைகள் உள்பட திரளான முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மக பூப்பாளையத்தில் முஸ்லிம்களின் போராட்டம் 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. போராட்ட பகுதிகளை சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா மூலம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் நேற்று காலை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் திடலில் போராட்டம் தொடங்கியது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். நெல்பேட்டையிலும் விடிய, விடிய போராட்டம் நடந்தது.

மதுரையில் மகபூப்பாளையம், நெல்பேட்டை ஆகிய 2 இடங்களில் முஸ்லிம்களின் போராட்டம் நடப்பதால் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com