குரோம்பேட்டை பகுதியில் செல்போன் பறித்த வாலிபர் கைது

குரோம்பேட்டை பகுதியில் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரோம்பேட்டை பகுதியில் செல்போன் பறித்த வாலிபர் கைது
Published on

சென்னை:

கூடுவாஞ்சேரி, விமல் அவென்யூவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பிரபாகர். இவர் நேற்று முன்தினம் மாலை குரோம்பேட்டையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஜேம்ஸ் பிரபாகரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.

இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரணை செய்து சேலையூரை சேர்ந்த லோகேஷ் (21) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 3 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. லோகேஷ் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com