அனாதை இல்ல சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: கேரள பாதிரியார் கைது

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் அனாதை இல்லத்தை சேர்ந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு தலைமறைவாக இருந்த பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அனாதை இல்ல சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: கேரள பாதிரியார் கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள மீனங்காடி பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் பராமரிப்பில் இயங்கிவரும் அனாதை ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் ஏராளமான சிறுவர்கள் தங்கியுள்ளனர். இங்குள்ள இரு சிறுவர்களை அந்த தேவாலயத்தின் பாதிரியார் ஒருவர் கடந்த இரண்டாண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக அவர்களின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பான தகவல் கிடைத்தவுடன் புகாருக்குள்ளான பாதிரியார் சாஜி ஜோசப் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்காக போலீசார் தேடி வந்தனர். மங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்த பாதிரியார் வயநாடு மாவட்டத்தில் உள்ள தாமரச்சேரி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்துசென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

கைதான சாஜி ஜோசப் கன்னூர் மாவட்டத்தில் உள்ள கோட்டியூர் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com