மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் பட்னாவிஸ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில், முதலமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் பட்னாவிஸ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
Published on

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று லத்தூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். லத்தூர் அருகே சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது. இதனால், ஹெலிகாப்டரில் இருந்த முதலமைச்சர் பட்னாவிஸ் மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தரையில் மோதி நின்றது. இதில், ஹெலிகாப்டர் கடுமையாக சேதம் அடைந்தது. எனினும், உள்ளே இருந்த முதலமைச்சர் பட்னாவிஸ் மற்றும் அதிகாரிகள் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் மாற்று வாகனம் மூலம் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் லத்தூர் சென்றனர்.


இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com