மும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்: கடலோர காவல் படை தேடுகிறது

மும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, தேடும் பணியில் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.
மும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்: கடலோர காவல் படை தேடுகிறது
Published on

மும்பை:

மும்பையின் ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.20 மணியளவில் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 5 பேர் மற்றும் இரண்டு பைலட்டுகள் பயணம் செய்தனர். 

ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் கிணறுக்கு அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஆனால், குறித்த நேரத்திற்குள் எண்ணெய்க் கிணறு உள்ள பகுதியில்  தரையிறங்கவில்லை. 

கடைசியாக 10.30 மணியளவில் எண்ணெய் கிணற்றில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் ஹெலிகாப்டர் தொடர்பில் இருந்துள்ளது. அதன்பின்னர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால், கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com