டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சின்னசேலம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
டாஸ்மாக் கொள்ளை
டாஸ்மாக் கொள்ளை
Published on

சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக சீனிவாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சீனிவாசன் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் கடைக்குள் சென்றுபார்த்தபோது அங்கிருந்த 240 மதுபாட்டில்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடதுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com