

தேனி:
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி சத்யா நகர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாரதிராஜ் (வயது 48). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவரது மனைவி வெண்ணிலா தனது கணவரை கண்டித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்றும் மது குடித்து வந்ததை வெண்ணிலா கண்டித்தார். அப்போது பாரதிராஜாவின் தாய் மற்றும் மகனும் சத்தம் போட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
மறுநாள் காலையில் வந்து பார்த்த போது பாரதிராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.