

சின்னமனூர்:
சின்னமனூர் அருகிலுள்ள அய்யம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 70). விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு
மனைவியுடன் தனது தோட்டத்துக்கு சென்று விட்டார். இந்தநிலையில் மாலையில் அவரது மருமகள் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின்
பூட்டு மற்றும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள்
சென்று பார்த்தார். அப்போது மர்மநபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.