சின்னமனூர் அருகே அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தம்பி

சின்னமனூர் அருகே இடப்பிரச்சனையில் அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தம்பி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னமனூர் அருகே அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தம்பி
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னையா (வயது 70). இவரது தம்பி பால்ராஜ். இவர்கள் 2 பேருக்கும் அடுத்தடுத்து விவசாய தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டத்தில் தனித்தனியாக வீடு கட்டி அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

பால்ராஜ் தோட்டத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி குழாய் பதித்து தண்ணீர் எடுத்துச் சென்றுள்ளார். இதற்காக தோட்டத்துக்கு செல்லும் சிறிய பாதையை லாரி செல்லும் அளவுக்கு பெரிய பாதையாக மாற்றினார்.

இதனால் பால்ராஜூக்கும் அவரது அண்ணன் பொன்னையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று பால்ராஜ் மற்றும் அவரது மருமகன் செல்வம் ஆகிய 2 பேரும் பொன்னையாவை தாக்கி கீழே தள்ளி அவர் தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டனர். இதில் படுகாயமடைந்த பொன்னையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜ் மற்றும் அவரது மருமகன் செல்வத்தை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com