

சின்னாளபட்டி அருகே உள்ள அம்பாத்துரையை சேர்ந்தவர் பழனிபாண்டி (வயது 30). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பழனிபாண்டி குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னாளபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பழனிபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.