மாணவி பாலியல் புகார் - முன்னாள் மத்திய மந்திரியிடம் விரைவில் விசாரணை

மாணவி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி சின்மயானத்திடம் விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்த்
முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்த்
Published on

ஷாஜகான்பூர்:

பா.ஜனதா தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த் மீது, அவரது கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் சமீபத்தில் பாலியல் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவினர், கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சின்மயானந்துக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் இந்த விசாரணையை 10-ந்தேதிக்குப்பின் நடத்துமாறு அவரது தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

தற்போது விசாரணைக்கு தயாராக இருப்பதாக சின்மயானந்தின் வக்கீல் கூறியுள்ளார். எனவே அவரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

இதற்கிடையே இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சின்மயானந்தின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக சின்மயானந்தின் வக்கீலிடமும் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com