துப்பாக்கி சுடுதல்: டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை

14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இறுதிப் போட்டிக்கு நுழைந்ததன் மூலம் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார்.
சிங்கி யாதவ்
சிங்கி யாதவ்
Published on

14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டார். இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் 588 புள்ளிகள் பெற்றார். இது ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி நிர்ணயம் புள்ளியை விட அதிகம் என்பதால் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.

ஆனால், 8 பேர் கலந்து கொண்ட இறுதிப் போட்டியில் 6-வது இடமே பிடித்து ஏமாற்றம் அளித்தார். இந்த பிரிவில் ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த ராஹி சர்னோபாட், அன்னு ராஜ் சிங், நீரஜ் கவுர் ஆகியோர் ஒலிம்பிக் 2020 தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com