கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன - புதிய தகவல்

கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் பின்வாங்கி திரும்பிச் சென்ற போது, அவர்கள் இந்திய படை வீரர்களை அச்சுறுத்துவதற்காக 100-200 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரையில், இந்தியாவின் முன்னேறிய நிலையை நோக்கி சீன துருப்புகள் கடந்த வாரம் முன்னேறின. ‘பிங்கர்-4’ என்ற மோதல் பகுதியில் நடந்த இந்த அத்துமீறல் முயற்சியை அங்கு குவிக்கப்பட்டிருந்த இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

அதைத் தொடர்ந்து, ஆக்ரோஷமாக ஆயுதங்களுடன் வந்த சீன துருப்புகள் பின்வாங்கி திரும்பிச் சென்றன. அப்போது அவர்கள் இந்திய படை வீரர்களை அச்சுறுத்துவதற்காக 100-200 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதை நேரில் கண்ட வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

சீனாவின் இந்த அத்துமீறல், மாஸ்கோவில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்பு நடந்ததாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com