

பீஜிங்:
சீனாவின் எல்லைக்குட்பட்ட தன்னாட்சி உரிமம் கொண்ட ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.
ஆரம்பத்தில் வார இறுதியில் மட்டுமே நடந்த போராட்டங்கள், வார நாட்களிலும் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்நிலையில், ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம்-ஐ சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுவரும் இறக்குமதி-ஏற்றுமதி பொருட்காட்சியின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை சந்தித்த கேரி லாம் ஹாங்காங்கில் தற்போது நிலவி வரும் சூழல் தொடர்பாக விளக்கம் அளித்தார்.