இந்திய எல்லையில் சீனா உள்கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிக்கிறது என்பது உண்மை: இமாச்சல பிரதேச முதல்வர்

இந்திய ராணுவ வீரர்கள் கண்காணித்து வந்த போதிலும், இந்திய எல்லையில் சீனா அதன் கட்டுமான பணிகளை வலுப்படுத்தி வருகிறது.
ஜெய்ராம் தாகூர்
ஜெய்ராம் தாகூர்
Published on

அருணாச்சல பிரதேசம், திபெத்துடன் உள்ள இந்திய எல்லையை ஒட்டி சீனா சாலை அமைத்தல், குடியிருப்பு அமைத்தல் போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

கடந்த வருடம் கல்வான் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீனா ராணுவ வீரர்கள் வந்தபோது இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை தடுத்தனர். அப்போது இருநாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இரண்டு பக்கமும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதன்பின் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் இருந்து பின்நோக்கி சென்றனர்.

என்றாலும், அருணாச்சல பிரதேச மாநிலம் எல்லை அருகே மிகப்பெரிய குடியிருப்பை கட்டியது. பிரம்மபுத்திரா நதி பள்ளத்தாக்கில் மிகப்பெரிய சாலையை கடந்த நான்கு வருடமாக அமைத்து தற்போது அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. செயற்கைக்கோள் படம் மூலம் உலகிற்கு தெரியவந்தது.

இந்த நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் ‘‘சீனா அதன் உள்கட்டமைப்புகளை இந்திய- திபெத் எல்லையில் வலுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். இதுகுறித்து மத்திய அரசுக்கு நாங்கள் தகவல் தெரிவிப்போம். நம்மை விட மிக உயரந்த இடத்தில் அமைத்துள்ள சாலைகள் வழியாக சீனா கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com