

வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள அய்யலூர் காக்கையன் பட்டியைச் சேர்ந்தவர் சின்னான். கூலித் தொழிலாளி. இவருக்கும் பெரியக்காள் (வயது 30) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த பெரியக்காள் கண்வலிக்கிழங்கை, தின்று மயங்கி விழுந்தார். அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.