கந்திகுப்பம் அருகே குழந்தைக்கு கட்டி- மனமுடைந்த தாய் தற்கொலை

கந்திகுப்பம் அருகே குழந்தைக்கு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளதால் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மவாட்டம், பர்கூர் அருகே உள்ள வானியம்பாடி ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(30). இவருக்கு கார்த்திகா(28) என்பவருடன் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு பிறந்த நாள் முதலே மூளையில் கட்டி ஏற்பட்டு சிகிச்சையளித்து வந்துள்ளனர். தனது குழந்தைக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு கஷ்ட்டப்ட்டு வருவதை பார்த்த கார்த்திகா மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மனமுடைந்து காணப்பட்ட கார்த்திகா பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனவேதனையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார் கார்த்திகா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com