தலைமை போலீஸ் அதிகாரி பதவி விலக சிறிசேனா உத்தரவு

இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #SrilankanBlasts #Sirisena
தலைமை போலீஸ் அதிகாரி பதவி விலக சிறிசேனா உத்தரவு
Published on

* இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவல் முன்கூட்டியே கிடைத்தும், செயல்பட தவறியதற்காக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

* இலங்கையில் மாடம்பி என்ற இடத்தில் உள்ள சர்வதேச பள்ளியில் ஒரு வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒரு மனித வெடிகுண்டு போன்ற தோற்றத்தில் உள்ளார். அவரிடம் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லை.

பயங்கரவாதிகளுக்கு அவர் பயிற்சி அளித்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

* தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவலை இலங்கைக்கு நாங்கள் அளிக்கவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் உளவு தகவல் அளித்ததாக இலங்கை மந்திரி ஹர்ஷா டி சில்வா கூறியதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் இந்த மறுப்பை அளித்துள்ளார். தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் அவர் கூறினார்.

* நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிவாங்க இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக இலங்கை மந்திரி ருபன் விஜேவர்த்தனே கூறி இருந்தார். அதை இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணைத்தலைவர் ஹில்மி அகமது நிராகரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com