முதலமைச்சர் திறந்து வைத்த புதிய பாலத்தின் கல்வெட்டு உடைப்பு

தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் கல்வெட்டை மர்ம ஆசாமிகள் உடைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதலமைச்சர் திறந்து வைத்த புதிய பாலத்தின் கல்வெட்டு உடைப்பு
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் அந்த பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டை யாரோ உடைத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அனிதா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கல்வெட்டை உடைத்த மர்ம மனிதரை வலைவீசி தேடிவருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com