நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடல் மூலம் பாராட்டிய ப.சிதம்பரம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடல் வரிகள் மூலம் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பாராட்டி பேசியுள்ளார்.
ப சிதம்பரம்
ப சிதம்பரம்
Published on

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்யும்போது புறநானூறு பாடல் வரிகளை மேற்கோள்காட்டி தாக்கல் செய்தார்.

இதனையடுத்து திமுக எம்.பி ஆ.ராசா இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திருக்குறள் வரிகளை சுட்டிக்காட்டி மத்திய பட்ஜெட்டினை விமர்சித்தார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரியான ப.சிதம்பரம் மாநிலங்களவையில் பேசுகையில்,

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி’

எனும் பாரதியார் பாடலை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமனை பாராட்டினார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:

கர்நாடகா, கோவாவில் நிலவும் அரசியல் சூழலால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மையை எடுத்துக் கொண்டால், 62 ஆயிரத்து 907 கலாசி காலிப்பணியிடங்களுக்கு 82 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 4,19,137 பேர் பி.டெக் படித்தவர்கள், 40,751 பேர் எம்.இ படித்தவர்கள். இதற்காக நான் நிர்மலா சீதாராமனை குறை கூறவில்லை. ஆனால், இந்தியாவின் நிலை தற்போது இதுதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com