சத்தீஸ்கரில் பெண் மாவோயிஸ்டு சுட்டுக்கொலை- பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது பெண் மாவோயிஸ்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)
தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை மற்றும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சிந்தல்நார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டியூல்டு பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் மாவோயிஸ்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com